மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.31 கோடி கல்வி உதவித்தொகை

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித்தொகை என ரூ.6 கோடியே 31 லட்சத்துக்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

Update: 2023-08-02 18:19 GMT

புதுச்சேரி

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித்தொகை என ரூ.6 கோடியே 31 லட்சத்துக்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

கலப்பு திருமண உதவித்தொகை

புதுவை அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலப்பு திருமணம் செய்த 80 பேருக்கு தலா ரூ.2.50 லட்சம் என ரூ.2 கோடிக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் 789 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.31 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.6.31 கோடிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

சீருடையில் குவிந்த மாணவர்கள்

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், முதுநிலை கணக்கு அதிகாரி நெடுஞ்செழியன், கண்காணிப்பாளர்கள் பழனி, விநாயகமூர்த்தி, வேல்முருகன் லெபாஸ், கதிரவன், நலத்துறை அதிகாரிகள் ராஜா சாக்ரடீஸ், பாரி, வித்யாவதி, ராஜேஷ் கண்ணா, ஏழுமலை, சிவா, விஜயலட்சுமி, கலைச்செல்வி, மோகனா, இளவரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள், கலப்பு திருமணம் செய்தவர்கள் சட்டசபை வளாகத்தில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பள்ளி சீருடைகளில் மாணவ, மாணவிகளாக காட்சியளித்தனர். முதல்-அமைச்சர் சட்டசபைக்கு வரும் முன்பாக அவர்கள் அனைவரும் சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்காவில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்