123 பேருக்கு ரூ.1.92 கோடியில் வீடுகட்ட தவணை தொகை

ஏம்பலம் தொகுதி, சட்டமன்ற உறும்பினர் கிளை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update:2023-04-22 23:34 IST
123 பேருக்கு ரூ.1.92 கோடியில் வீடுகட்ட தவணை தொகை

பாகூர்

ஏம்பலம் தொகுதி, சட்டமன்ற உறும்பினர் கிளை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் தலமை தாங்கி நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் 93 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்திற்கான பணிஆணை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வீடு கட்டும் மாணியம். 30 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்றை மூலம் உடல் ஊனமுற்றோர்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1கோடியை 92 லட்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய தலமை செயல் அதிகாரி சவுந்தர்ராஜன், உதவி பொறியாளர் சுதர்சன் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்