குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து வழங்கினார்;
புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களில் அரசின் திட்டத்தில் எந்த உதவியும் பெறாதவர்களை தேர்ந்தெடுத்து மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்து, கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக முத்தியால்பேட்டை தொகுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு தேர்வான இல்லத்தரசிகளுக்கு காசோலைகளை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் வழங்கினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.