திருப்பதிக்கு மீண்டும் பி.ஆர்.டி.சி. பஸ்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.;

Update:2023-09-04 22:18 IST

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவின் படி, பி.ஆர்.டி.சி.க்கு சொந்தமான காலாவதியான 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் பழைய பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு புதுப்பிக்கப்பட்ட பி.ஆர்.டி.சி. பஸ் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை 9 மணிக்கு புறப்பட்டு திண்டிவனம், வந்தவாசி, காஞ்சீபுரம், திருத்தணி, புத்தூர் வழியாக சென்று மாலை 3.30 மணிக்கு திருப்பதியை சென்றடைகிறது. மீண்டும் திருப்பதியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வந்தடைகிறது. பயண கட்டணமாக ரூ.255 (முன்பதிவு கட்டணம் சேர்த்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்