ஆபரேஷன் உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

Update: 2023-10-16 19:01 GMT

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

எழுத்துத்தேர்வு

புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள 31 ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 15-ந் தேதி முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்தது.

இந்த தேர்வு எழுத 485 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 226 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வை எழுதினர்.

முடிவுகள் வெளியீடு

இந்த பணியிடங்களுக்கான முடிவுகளை நிர்வாக சீர்திருத்தத்துறை நேற்று வெளியிட்டது. அதன்படி தேர்வில் பொதுப்பிரிவில் 67.50 மதிப்பெண் பெற்று யோகேசன் என்பவர் முதலிடம் பிடித்தார். 66.50 மதிப்பெண் பெற்று சேசகிரி ராவ் செங்கேணி 2-ம் இடத்தையும், 64.50 மதிப்பெண் பெற்று ஆங்லே பிரினோ 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 13 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதேபோல் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் தேர்வில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டில் 2 இடங்களுக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்