60 மோட்டார் வாகன வழக்குகளுக்கு தீர்வு
புதுவையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 60 மோட்டார் வாகன வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி
புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் மோட்டார் வாகன விபத்துகள், பிரச்சினைகள் தொடர்பான மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இதற்காக புதுவையில் 2 அமர்வுகளும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு அமர்வும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அம்பிகா தொடங்கி வைத்தார். இதில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தின் நீதிபதி முரளி கிருஷ்ண ஆனந்தன், வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் 154 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 60 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. அதாவது சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான தொகைக்கு தீர்வுகள் காணப்பட்டது.