விபசாரத்தில் ஈடுபட்ட 5 அழகிகள் மீட்பு
அழகு நிலையத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 அழகிகளை மீட்டனர்.
புதுச்சேரி
புதுவையில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் இன்று எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள ஒரு அழகுநிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து விபசாரம் நடத்தியதாக உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த சிலம்பரசன் மரியதாஸ், நெல்லித்தோப்பை சேர்ந்த மேலாளர் சோனா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 5 அழகிகளையும் மீட்டனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன், 3 ஸ்வைப் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.