பாரம்பரிய உணவு வகைகளை ருசித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி
புதுச்சோியில் பாரம்பரிய பல்வேறு உணவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு ருசித்து பார்த்தார்.;
புதுச்சேரி
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் ஊட்டசத்து விழிப்புணர்வு ஊர்வலம் கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசுப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் வழுதாவூர் சாலையில் சிறிது தூரம் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் தயாரித்து வைத்திருந்த பாரம்பரிய உணவு வகைகளான புட்டு, கேள்வரகு அடை உள்ளிட்ட பல்வேறு உணவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு ருசித்து பார்த்தார். நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., இயக்குனர் முத்துமீனா, துணை இயக்குனர் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.