ராகு-கேது பெயர்ச்சி விழா

வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-10-08 18:27 GMT

வில்லியனூர்

வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராகு-கேது பெயர்ச்சி

18 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியானது இன்று மாலை 3.40 மணிக்கு நடந்தது. ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிவாலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி சமேத ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள ராகு- கேது தனி சன்னதியில் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. மதியம் 3.40 மணியளவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபம் ஏற்றியும், பரிகார பூஜை செய்தும் வழிபட்டனர். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.

புதுச்சேரி

புதுவை பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராகு பகவான், கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்