புதுச்சேரி: மாஹே பிராந்தியத்தில் 24-ந்தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கேரள அரசு நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாஹே பிராந்தியத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மாஹேவில் வரும் 24-ந்தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.