புதுமை அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி
உருளையன்பேட்டை புதுமை அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது.;
புதுச்சேரி-
புதுச்சேரி உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில் உள்ள புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி இன்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய பங்குதந்தை பெர்க்மான்ஸ் பீட்டர், உதவி பங்குதந்தை ஜான்சன் ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலியும், மதியம் 11 மணிக்கு சிறப்பு ஜெபவழிபாடும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும் நடந்தது. தொடர்ந்து தேவ நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.