காரைக்காலில் ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சை கண்டித்து காரைக்காலில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-20 16:10 GMT

காரைக்கால்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பு சார்பில் காரைக்கால் கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விமன் இந்தியா மூவ்மென்ட் தலைவி பாத்திமா ஜொஹரான் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நசிரா பேகம், புதுச்சேரி எஸ்.டி.பி.ஐ. துணைத்தலைவர் முகம்மது பிலால், பொதுச்செயலாளர் தமீம்கனி, காரைக்கால் மாவட்ட தலைவர் சுல்தான் கவுஸ் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க. நிர்வாகிகள் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்