வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-30 18:14 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அலைச்சறுக்கு போட்டி

புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி தலைமை செயலகம் எதிரில் நேற்று தொடங்கியது. இதில் புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் 80 பேர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.

வீரர்கள் தக்கை பலகையின் (சர்ப் போர்ட்) மீது நின்று கொண்டு சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து சென்று அசத்தினர். சீறும் அலைகளில் அதிக நேரம் பயணித்து சாகசம் செய்த வீரர், வீராங்கனைகள் புள்ளிகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பரிசளிப்பு விழா

இதன் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடந்தது. போட்டியில் ஓபன் பிரிவில் ரமேஷ் முதலிடமும், கிஷோர்குமார் 2-ம் இடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கமலி, சாந்தி ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்தனர். ஜூனியர் பிரிவில் கிஷோர்குமார் முதலிடம், அருண் 2-வது இடமும், பெண்கள் பிரிவில் கமலி முதலிடம், தன்ஷிகா 2-ம் இடமும் பிடித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் உதயக்குமார், இந்திய அலைச்சறுக்கு சம்மேளன தலைவர் அருண்வாசு, சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாளர் ஆஷா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து மாமல்லபுரம், கோவளம் ஆகிய இடங்களில் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஒட்டு மொத்தமாக நடக்கும் போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் சிறந்த வீரர்-வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்