தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

அரியாங்குப்பம் அருகே குடும்ப தகராறின் காரணமாக தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-17 16:54 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் தர்மபாலன் (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு விமலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தர்மபாலா மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். குடிப்பழக்கத்தால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

தர்மபாலனின் குடிப்பழக்கத்தை மனைவி விமலா கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த தர்மபாலன், நேற்று முன்தினம் இரவு நரம்பு தளர்ச்சி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலன்னிறி தர்மபாலன் உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்