மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

காரைக்காலில் மின்துறையில் காலியாக உள்ள 700 காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-10 17:25 GMT

காரைக்கால்

மின்துறையில் காலியாக உள்ள 700 காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி புறக்கணிப்பு

புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள 700 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் இன்று ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் தலைமை மின்துறை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக, புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள சுமார் 700 பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் கொள்கையை உடனே கைவிடவேண்டும். புதுச்சேரியை தொடர்ந்து, ஆந்திராவிலும், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடவேண்டும் என்பன உள்பிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் காரைக்காலில் உள்ள அரசு ஊழியர்கள் நலச்சங்கங்களை ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்