ரொட்டி பால் ஊழியர்கள் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு

ரொட்டி பால் ஊழியர்கள் பணியிட மாற்ற உத்தரவை நிறுத்திவைத்து அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுத்தார்.;

Update:2023-07-10 23:51 IST
ரொட்டி பால் ஊழியர்கள் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு

புதுச்சேரி

புதுச்சேரி கல்வித்துறையில் பணி செய்யும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சங்க தலைவர் மாறன் தலைமையில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் இன்று ரொட்டி பால் ஊழியர்கள் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து தங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கிய பிறகு, பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து பேசிய அமைச்சர், உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், அதுவரை பணியிட மாற்ற உத்தரவை நிறுத்திவைக்குமாறும் அறிவுறுத்தினார்.

தங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதற்கு அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ரொட்டி பால் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்