உருவச்சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது, உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update:2023-01-17 19:13 IST

புதுச்சேரி

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது, உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா இன்று புதுவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் நேரு, ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.அன்பழகன்

அ.தி.மு.க. சார்பில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் மாநில செயலாளர் நடராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், இணை செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வையாபுரி மணிகண்டன்

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.-புதிய நீதிக்கட்சி

அ.ம.மு.க. சார்பில் தெற்கு மாநில செயலாளர் யு.சி.ஆறுமுகம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஹரி கிருஷ்ணன், இணை செயலாளர் தரணி தேவி, துணை செயலாளர் பொற்கிலை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய நீதிக்கட்சி மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொன் நடராஜன், தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவி

அரியாங்குப்பம் தொகுதி காக்காயந்தோப்பில் அ.தி.மு.க அவைத்தலைவர் மாசிலா குப்புசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஞானபூங்கோதை, தொகுதி செயலாளர் இளம்வழுதி, மோகன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வில்லியனூர்

வில்லியனூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் தொகுதி செயலாளர் அப்பாவு தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் குப்புசாமி, மாயகிருஷ்ணன், ராஜேந்திரன், வெங்கடேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உறுவையாறு கிராமத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கு.கலிய பெருமாள் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தனபால், துலுக்காணம், நாராயணன், பெருமாள், சுகானந்தம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிய உணவு

அரியாங்குப்பத்தில் உள்ள பிரம்மன் சிலை அருகில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். விழாவில் கட்சியின் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு 500 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்