போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரி காவலர் குடியிருப்பில் குடும்ப பிரச்சினையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-17 15:51 GMT

புதுச்சேரி

புதுச்சேரி காவலர் குடியிருப்பில் குடும்ப பிரச்சினையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ்காரர்

புதுவை கோரிமேடு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 39). இவர் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இன்று மதியம் நாகராஜ் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றார். அப்போது குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த நாகராஜ் தனது அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விஜயகுமாரி கதவை தட்டினார். கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்கு நாகராஜ் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கார் மூலம் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்