தண்டவாளம், ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

புதுவையில் தண்டவாளம் மற்றும் அங்குள்ள ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை செய்தனர்.

Update: 2022-05-29 18:47 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் சமீபகாலமாக நாட்டு வெடி குண்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. ரவுடிகள் தங்களது எதிரிகளை பழிவாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை ஆள்நடமாட்டம் இல்லாத ரெயில் தண்டவாள பகுதி, பாழடைந்த கட்டிடங்களில் பதுங்கி வைத்து வருகிறார்கள். சமீபத்தில் காரா மணிக்குப்பம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுச்சேரி கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி தலைமையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் புதுவை ரெயில் நிலையம், வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தண்டவாளங்களில் திடீரென சோதனை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்