கிராம ஒற்றுமை பயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்கக்கோரி நடக்க இருந்த கிராம ஒற்றுமை பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் திரு-பட்டினம் கடைவீதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-20 16:52 GMT

திரு-பட்டினம்

24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்கக்கோரி நடக்க இருந்த கிராம ஒற்றுமை பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் திரு-பட்டினம் கடைவீதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24 மணி நேரமும் டாக்டர்கள்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை இருக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு 100 நாட்களும் முழுமையாக வேலை வழங்க வேண்டும். விடுபட்ட விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு உடனே பென்ஷன் வழங்க வேண்டும்.

கீழையூர் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து இலவச குடிநீர் வழங்க வேண்டும். திரு-பட்டினம் சட்டமன்ற தொகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மாதந்தோறும் அரிசிக்கு பணம் கொடுப்பதை கைவிட்டு அரிசியாக வழங்க வேண்டும் என்று கீழையூர் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கிராம மக்கள் போராட்டம்

இதுதொடர்பாக அவர்கள் கிராம ஒற்றுமை நடைபயணம் செய்யப் போவதாக அறிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி கொடுக்காததால் திரு-பட்டினம் கடைவீதியில் இன்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் காதர் மெய்தீன் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்