2,000 பனை விதைகள் நடவு

அபிஷேகப்பாக்கம் தெப்பக்குளத்தை சுற்றி 2,000 பனை விதைகள் நடவு பணிகளை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-08-27 15:57 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் சார்பில் அபிஷேகப்பாக்கம் தெப்பக்குளத்தை சுற்றி 2,000 பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக பூரணாங்குப்பம் ஆனந்தன் வரவேற்றார். ஜோதி குருகுல யோகா பயிற்சி ஆசிரியர் ஆனந்தராஜ், சாரதி முதியோர் இல்ல நிர்வாகி கலைவாணி, பூக்கள் திருநங்கை அமைப்பின் தலைவி கிரிஜாநாயக், யோகா மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் பங்கு பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்