குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும் இடங்கள்
பாகூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யுப்படுவதால் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
பாகூர்
புதுச்சேரி கிருமாம்பாக்கம் பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாளை (செவ்வாய்கிழமை) சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிருமாம்பாக்கம், கிருமாம்பாக்கம் பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படும். இதே போல் பாகூர்பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாகூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.