பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
புதுச்சேரி
புதுவை ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலின் அக்னி பிரவேச தினத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்தது. பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.