அலங்கோலமாக காட்சியளிக்கும் பெரியார் சிலை
மணவெளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பெரியார் சிலை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.;
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் அடுத்த மணவெளி கிராமத்தில் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் பெயரை முன்நிறுத்தி கடந்த 60 ஆண்டு களுக்கு முன்பு மார் பளவு தந்தை பெரியாரின் சிலை பள்ளி வளாகத்தின் முன்புறத்தில் வைக்கப்பட்டது. தற்போது அந்த சிலை சரிவர பராமரிக்காததால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே பெரியார் சிலையை சீரமைத்து நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.