பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பாகூர் மூர்த்திக்குப்பம் பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்களன்று நடக்க இருக்கின்றது.;

Update: 2023-04-29 17:03 GMT

பாகூர்

பாகூர் தொகுதி மணப்பட்டு அடுத்த மூர்த்திக்குப்பம் பகுதியில் பெரியாண்டவருக்கு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் திங்கட்கிழமை நடக்கிறது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், புண்ணியாவஜனம், ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியுடன் தொடங்கி முதல் கால பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்படுகிறது. பின்னர் 10.20 மணிக்குள் விநாயகர், மூலவர் பெரியாண்டவர், முருகர் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்படுகிறது. விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தியாகராஜன், முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மூர்த்திக்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்