30 வாகனங்களுக்கு அபராதம்
புதுவையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 30 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் நகரில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு இருப்பதாக போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார் வந்தது. அதையடுத்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் இன்று புதுவை-கடலூர் சாலை, உப்பளம் சாலைகளில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி 30-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.