பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
புதுச்சேரி
பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் பிறந்தநாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிள்ளைத்தோட்டம் காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, கே.எஸ்.பி. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-அ.தி.மு.க.
தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.ம.மு.க.
அ.ம.மு.க. சார்பில் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதே போல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தேவ.பொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.