அரசு ஆஸ்பத்திரியில் அலைமோதிய நோயாளிகள்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-10-09 17:51 GMT

புதுச்சேரி

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது.

டெங்கு காய்ச்சல்

புதுவையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் சளி, காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டு வருகிறுது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

நோயாளிகள் கூட்டம்

இந்தநிலையில் நாள்தோறும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அவர்களில் சந்தேகப்படுபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று சோதனையும் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் வாரத்தின் முதல் வேலைநாளான இன்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. வெளிப்புற சிகிச்சை பிரிவில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொதுமக்களின் வரிசை ஆஸ்பத்திரி வளாகத்தை விட்டு ரோட்டுவரை நீண்டிருந்தது. இதேபோல் தனியார் கிளினிக்குளிலும் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்