மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும்பணி மீண்டும் தொடங்கியது
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும்பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
வில்லியனூர்
ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.63 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்கியது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால், அப்பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய்.சரவணன்குமார் முயற்சியால், நிலுவையில் உள்ள வழக்கானது முடிக்கப்பட்டது. இந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியானது மீண்டும் இன்று தொடங்கியது. அமைச்சர் சாய்.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்.பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், ஊசுடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாய். தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.