8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
உலக மனநல தினம்
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக சுகாதார நிறுவனத்தால் உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள் 'மனநலம் அனைத்து மக்களின் உரிமை'ஆகும்.
மனநலத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஒவ்வொரு மனிதனின் மனநலத்தை காப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்வது முக்கிய நோக்கம்.
8 பேரில் ஒருவர் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவர் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டால் அவருடைய உடல்நலம், வாழ்க்கை முறை, மற்றவர்களிடம் பழகும் விதம் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. தற்போது இளம்வளர் பருவத்தினர், இளைஞர்கள் மனநல பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கு மனநலம் பற்றிய அறிவு மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் ஆரம்பத்திலேயே கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்கள் வருங்காலத்தில் நல்ல முறையில் வாழ வழிவகுக்கும். நாம் நமது மனதை அறிய வேண்டியது மட்டும் அல்லாமல் அதனைக்காக்கும் உரிமையையும் அறிந்து கொள்ள வேண்டும். நாம் நம் உரிமையை அறிவது மூலம் மற்றவர்களுக்கும் நன்மை பயக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.