ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

புதுவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.

Update: 2023-08-29 17:03 GMT

முத்தியால்பேட்டை

கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை புதுவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாடினார்கள். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். அத்துடன் பலர் தங்கள் வீடுகளில் அறுசுவை விருந்து செய்து அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து இந்த பண்டிகையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். சில இடங்களில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் கேரள மக்களின் பாரம்பரிய உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்