116 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 116 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடப்பட்டுள்ளது.;

Update:2023-07-09 22:46 IST

புதுச்சேரி

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் (பொறுப்பு) உதயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 116 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின் படி பொருந்தும். அவர்கள் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இடஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும். இல்லை என்றால் இட ஒதுக்கீடு பரிசீலிக்கப்பட மாட்டாது.

பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கல்வி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை www.igmcri.in கல்லூரி இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், அதில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் ரூ.250-க்கும் மற்ற பிரிவினர் ரூ.500-க்கும் பெருந்தலைவர் காமராஜர் மருத்துவ சங்கம் என்ற பெயரில் வரைவோலை எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை இயக்குனர், இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி என்ற முகவரிக்கு வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் புதுவையில் நேர்காணலுக்கு மட்டுமே அழைக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்