சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது

சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது என பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறினார்.;

Update:2023-09-10 21:56 IST

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி பகுதியில், தூய்மை பாரத திட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ஒரு வார காலத்துக்கு மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென சனாதனத்தை ஒழிப்போம் என கிளம்பியுள்ளார். பெரியார் போன்ற பெரிய தலைவர்களே சனாதனத்தை ஒழிக்க கிளம்பி தோல்வியை தழுவியுள்ளனர். இவர் எம்மாத்திரம். இவர் மட்டுமில்லை. சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது.

சனாதனத்தை ஒழிப்பதை காட்டிலும் சாராயத்தை ஒழிப்போம் என கூறினால் தாராளமாக பேசலாம். சனாதனத்தை ஒழிப்போம் என ஒட்டுமொத்த இந்து மதத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். இது ஒரு வகை மலிவு விலை அரசியல். இதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும். அப்போது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்