ரூ.13 லட்சத்தில் புதிய மின்மாற்றி

தானாம்பாளையத்தில் ரூ.13 லட்சத்தில் புதிய மின்மாற்றியை சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்.;

Update:2022-05-27 22:54 IST

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி தானாம்பாளையத்தில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரூ.13 லட்சம் செலவில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியை சபாநாயகர் செல்வம் நேற்று இயக்கி வைத்தார். மேலும் தனது சொந்த முயற்சியால் மணவெளி தொகுதி முழுவதும் உள்ள தெரு விளக்கு களை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து, 3 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகளை சபாநாயகர் செல்வம் மின்துறைக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மின் துறை செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் திருமுருகன், தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, இயக்குனர் சக்திவேல், தொகுதி முக்கிய பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க. மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்