நேரு வீதியில் இருபக்கமும் பார்க்கிங் வசதி வேண்டும்

புதுச்சேரி நேரு வீதியில் இரு பக்கமும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-25 16:46 GMT

புதுச்சேரி

புதுச்சேரி நேரு வீதியில் இரு பக்கமும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி நேரு வீதி வணிகர்கள் சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள ரியா ஹாலில் நடந்தது. சங்கத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பழனி அடைக்கலம், துணைத் தலைவர்கள் இசைக்கலைவன், நடராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த காலங்களில் நடந்தது போல் இந்த ஆண்டும் நேருவீதி வணிக திருவிழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்த வேண்டும்.

இருபக்க வாகன நிறுத்தம்

நேரு வீதியில் வணிக நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பயன்தரக்கூடிய வகையில் சாலையின் இரு பக்கமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும். இந்த திட்டத்தை புதுவை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்.பண்டிகை காலங்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் சாலையோரங்களில் தற்காலிக கடை அமைப்பதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் காலை நேரங்களில் மீன்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். நேரு வீதியில் நடைபாதையின் அருகில் உள்ள பாதாள சாக்கடையை சரி செய்வதற்காக போடப்பட்ட சிமெண்ட் சிலாப்பை ஒழுங்குப்படுத்தி சாலை ஓரங்களில் கடைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்