சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் வாலிபர்கள் இன்று புதுச்சேரி வந்தனர்.
புதுச்சேரி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் முகமது இர்பான், ஜதீப் சக்ரவர்த்தி. நண்பர்களான இவர்கள் இருவரும் இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்காக கடந்த 14.11.2022 அன்று கொல்கத்தாவில் இருந்து 2 பேரும் தனித்தனி சைக்கிளில் பயணத்தை தொடங்கினர். இவர்கள் அசாம், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், பீகார், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சண்டிகர், டெல்லி, மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு வழியாக இன்று புதுச்சேரி வந்தனர். இங்கிருந்து புறப்பட்ட அவர்கள் தெலுங்கானா வழியாக வருகிற நவம்பர் மாதம் கொல்கத்தா சென்று சேர திட்டமிட்டு உள்ளனர்.