நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
புதுவை கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.;
திருபுவனை
புதுவை கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் கனவேல் முகாமை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அருளரசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பேராசிரியர் விசாலாட்சி மாணவர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர்கள் பெருமாள், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.