தேசிய அறிவியல் தினம்
புதுச்சேரி வேல்ராம்பேட் சாரதா கங்காதரன் கல்லூரியில் கணிதம், இயற்பியல் மற்றும் முதுகலை கணிதத்துறை சார்பில் கணித மேதை ராமானுஜம் தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி வேல்ராம்பேட் சாரதா கங்காதரன் கல்லூரியில் கணிதம், இயற்பியல் மற்றும் முதுகலை கணிதத்துறை சார்பில் கணித மேதை ராமானுஜம் தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் உதயசூரியன் தலைமை தாங்கினார். கல்லூரி துணைத்தலைவர் பழனிராஜா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் போப் ஜான் பால் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் ஜெரால்டு அந்தோணி ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே ஓவியம், கட்டுரை, வினாடி-வினா, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் சீனிவாச ராகவன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கணித துறை தலைவர் கீதா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.