எம்.பி.பி.எஸ்., எம்.டி. படிப்புக்கு கட்டணம் அறிவிப்பு
அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படிப்புக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு (2023-23) கல்வியாண்டிற்கு கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 180 இடங்களில் அரசு ஒதுக்கீடாக 131 இடங்களும், என்.ஆர்.ஐ. ஒதுக்கீடாக 22 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடாக 27 இடங்களும் உள்ளன.
புதுச்சேரி மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 700-ம் கட்டணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல் முதுநிலை மருத்துவம் படிப்புகளுக்கு (எம்.டி., எம்.எஸ்.) கட்டணமாக ரூ.1 ஒரு லட்சத்து 85 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடையில் படிப்பை நிறுத்தினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த தகவலை கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.