மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

புதுவை உருளையன்பேட்டை போலீசார் வாகன சோதனையின் போது திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.;

Update: 2023-03-25 16:22 GMT

புதுச்சேரி

புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரோடு- புவன்கரே வீதி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் முதலியார்பேட்டை பஜனைமடத்துவீதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 33) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்