குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
புதுச்சோியில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் அமைச்சர் சாய்.சரவணன்குமாா் காலை திடீர் ஆய்வு செய்தாா்.;
வில்லியனூர்
புதுவை குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊழியர்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருகிறார்களா? என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதன்பின் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மேம்படுத்துவது, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், பாப்ஸ்கோ நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்துவது, ரேஷன் அட்டையில் செயல்படுத்தப்படும் மாற்றங்கள் மற்றும், திருத்தங்களை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி, இணை இயக்குனர் தயாளன், இயக்குனர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.