மழைக்கால பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை
மங்கலம் தொகுதியில் மழைக்கால பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.;
வில்லியனூர்
பருவமழை சேதங்கள் ஏற்படாமல் இருக்க மங்கலம் தொகுதியில் உள்ள முக்கிய பணிகள் குறித்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். முக்கிய பணிகளான மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட படங்கு செட்டி வாய்க்கால், கீழ்சாத்தமங்கலம், கீழூர் மங்கலம் ஆகிய பகுதியிலுள்ள ஏரி மற்றும் வாய்க்கால் தூர்வாருவது தொடர்பாகவும், உருவையாறு செல்வா நகர், திருக்காஞ்சி, பெருங்களூர், கீழூர் பகுதியில் உள்ள எல் வடிவ மற்றும் யூ வடிவ வாய்க்கால்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் போர்க்கால நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, அதிகாரிகள் சுந்தர்ராஜன் சேகர், கோபி, மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.