எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
வில்லியனூரில் வடக்கு மாநில அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது.
வில்லியனூர்
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனூரில் புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யா, மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர் தமிழரசி, கட்சியின் முன்னோடிகள் ரகுபதி, ஆனந்தன், அம்மா பேரவை செயலாளர் காண்டீபன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், இலக்கிய அணி செயலாளர் பாலு, மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர்கள் செந்தில், ராமச்சந்திரன், செல்லா என்கிற தமிழ்செல்வன், கலியமூர்த்தி, புஷ்பா, சுப்புலட்சுமி, அண்ணாமலை, மீனன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான ஆரோவில் பகுதிக்கு நேற்று காலை வந்தார். அவருக்கு புதுவை எல்லையில் அ.ம.மு.க. சார்பில் மாநில செயலாளர்கள் எஸ்.டி.சேகர் மற்றும் யூ.சி.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.