பொது இடங்களில் முககவசம் கட்டாயம்
பாகூர்,வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆனையர்கள் பொது இடங்களில் முககவசம் கடடாயம் அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாகூர்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை நிறுவனங்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசம், தடுப்பூசிகள் செலுத்தியதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகமும், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.