கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி

எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி இன்று நடந்தது;

Update:2023-08-19 22:23 IST

புதுச்சேரி

எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி இன்று நடந்தது.

மாரத்தான் போட்டி

புதுவை கண்டாக்டர் தோட்டத்தில் உள்ள கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மற்றும் உடற்கல்வி பிரிவு இணைந்து நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி , இன்று நடந்தது.

புதுவை கம்பன் கலையரங்கிலிருந்து இந்த ஓட்டத்தை நேரு எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் சின்னசுப்புராயப்பிள்ளை வீதி, சுப்பையா சாலை, பாரதி வீதி, மறைமலயைடிகள் சாலை வழியாக மீண்டும் கம்பன் கலையரங்கிற்கு வந்தடைந்தனர்.

10 பேருக்கு பரிசு

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் குறள்அமுதன், பாலாஜி, முகேஷ், லெத்தோவிக், பாலகிருஷ்ணன் ஆகியோர் முறையே முதல் 5 இடங்களை பிடித்தனர். இதேபோல் பெண்கள் பிரிவில் கவிதா, ராஜலட்சுமி, சந்தியா, பத்மபிரியா, பிருந்தா ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்தனர்.

வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செந்தில் வினோத், உடற்கல்வி பேராசிரியர் ஜீஜீ தாமஸ், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் எழில் சரோஜினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநில அளவிலான...

தற்போது வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் நடத்த உள்ள மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்