மணக்குள விநாயகர் கோவில் தேரோட்டம்

புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-08-30 16:36 GMT

புதுச்சேரி

புதுவை மணக்குள விநாயகர் கோவில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடந்தது. கோவில் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரை உற்சவருடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர் நேரு வீதி, அம்பலத்தடையார் வீதி வழியாக பிற்பகலில் மீண்டும் தேர் கோவிலை அடைந்தது.

கடல் தீர்த்தவாரி

பிரமோற்சவ விழாவில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு பவுர்ணமி கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வந்து தீர்த்தவாரியில் கலந்து கொள்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

அதன்பின் வருகிற 7-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 8-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 13-ந்தேதி உற்சவசாந்தி நிகழ்ச்சி மற்றும் 108 சங்காபிசேகம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்