மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு, மகாமாரியம்மன் கோவிலிருந்து கரகம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஏராளமான பெண்கள் பூக்கள் கொண்ட தட்டுக்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15-ந் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.