மாகி, ஏனாம் கொரோனா இல்லாத பகுதியாக மாறியது

மாகி, ஏனாாம் கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது.

Update: 2022-11-10 15:32 GMT

புதுச்சேரி

மாகி, ஏனாாம் கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது.

3 பேருக்கு பாதிப்பு

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 475 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுவையில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என 3 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாகி, ஏனாமில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதால் கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது.

இன்று 20 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வீடுகளில் 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 12 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 82 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 191 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 58 ஆயிரத்து 188 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

217 குழந்தைகளுக்கு காய்ச்சல்

இன்று வைரஸ் காய்ச்சலுக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் 217 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 9 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது 66 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்