லாட்டரி விற்றவர் கைது
லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் செல்போன் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.;
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கரியமாணிக்கம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தமிழக பகுதியான பாக்கம் அடுத்த வெள்ளாழங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த இளங்கோ (வயது 48) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இளங்கோவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன், 3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.