லாரி டிரைவர் திடீர் சாவு

வில்லியனூர் லாரி டிரைவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.;

Update:2023-04-28 22:50 IST

வில்லியனூர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் கோபி. லாரி டிரைவர். இவர் லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு புதுவை ஒதியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்